[ad_1]
Chennai: கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த கதிரவன் என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில், அதிர்ச்சியான சில புகைப்படங்களைக் காண முடிந்தது. சிறிய தடுப்பணை அருகே, ஏராளமான சிறு வெள்ளைக் கொக்குகள் கொல்லப்பட்டுக்கிடந்தன. அவற்றுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் காண முடிந்தது. இந்தக் கொக்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். கழுகு ஒன்றையும் வேட்டையாடிப் பிடித்து, அந்தப் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஏராளமான பறவைகளை வேட்டையாடியதோடு, புகைப்படம் எடுத்து பதிவிட்டிருப்பது விலங்கின ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வெண் கொக்கு (little egret; Egretta garzetta) என்பது கொக்கு இனத்தில் சிறியவகை வெள்ளைக் கொக்கு ஆகும். வளர்ந்த சிறு வெண் கொக்கு, எடை 350-550 கிராம் வரை இருக்கும். இதை, குளத்துக் கொக்கு, குருட்டுக் கொக்கு, மடையான் என்றும் சொல்வார்கள். ஈரான் கொக்கின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருப்பது இந்தக் கொக்கின் சிறப்பம்சம். ஈரான், இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை நாடுகளில் பரவலாகக் காணப்படும் பறவை இனம் இது. இந்தக் கொக்குகளை உணவுக்காக வேட்டையாடுவது அதிகரித்துவருகிறது.
1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன உயிர் பாதுகாப்புச் சட்டம், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றைப் பாதுகாக்க வழிவகைசெய்கிறது. இந்தச் சட்டத்தின்படி, உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குறிய குற்றமாகும்.
இச்சட்டத்தில், ஆறு பட்டியல்கள் உள்ளன. பட்டியல் ஒன்று மற்றும் இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ள வனவிலங்குகள் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவை. இப்பட்டியல்களில் உள்ள உயிரினங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு, இச்சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. பட்டியல் மூன்று மற்றும் பட்டியல் நான்கில் இடம் பெற்றுள்ளவற்றுக்கு ஊறு விளைவிப்போருக்கு சற்று குறைவான தண்டனைகள் வழங்கப்படுகின்றன; இவையும் பாதுகாக்கப்பட்டவையாகும். பட்டியல் 5-ல் இடம்பெற்றுள்ள காக்கா, எலி போன்றவற்றை மட்டுமே வேட்டையாட அனுமதி உள்ளது.
வனச்சட்டம் பிரிவு - 9-ன்படி வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. விலங்குகள் என்ற சொல்லுக்குள் நில வாழ்வன, நீர்வாழ்வன, பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன இவற்றின் குட்டிகள், முட்டைகள் வரை அடங்கும். அதன்படி , பறவையினங்களைக் கொல்லுதல், பொறி வைத்துப் பிடித்தல் ஆகியவை முற்றிலும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
வனத்துறையினர் சுதாரித்துக்கொண்டு, பறவைகளை வேட்டையாடுபவர்களைப் பொறி வைத்துப் பிடிக்க வேண்டுமென்று பறவையின ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பறவையினங்களைக் கொன்று செல்ஃபி! - கண்டுகொள்ளுமா வனத்துறை
TAGS :
COMMENTS