[ad_1]
Chennai: `ஆய்வாளர் முனிசேகர்தான் பெரியபாண்டியனைச் சுட்டார்’ என்பதை சென்னைக் காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 8-ம் தேதி மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் குருமூர்த்தி, எம்புரோஸ், சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்த்ரன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளையன் நாதுராம் தன்னுடைய கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாகத் தகவல் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் போலீஸார் சென்றனர். அப்போது, நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் காயமடைந்தனர்.பெரியபாண்டியனை ராஜஸ்தான் கொள்ளையர்கள் சுட்டுவிட்டதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெய்த்ரன் போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பெரியபாண்டியனின் உடலைத் துளைத்த குண்டு, முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்ததாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். மேலும் 'சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ்’ உறுதியாக கூறினார்.இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் கூறியத் தகவல் உண்மைதான் என்று சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. `ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில், ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களைச் சுட்டபோது தவறுதலாகப் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது. கொள்ளையர்களிடம் இருந்து ஆய்வாளர் பெரியபாண்டியனைக் காப்பாற்றவே தவறுதலாக முனிசேகர் சுட்டார்’ என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் காவல்துறையின் விசாரணை அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’பெரியபாண்டியனைச் சுட்டது முனிசேகர்தான்!’ - உறுதிப்படுத்திய சென்னை போலீஸ்
TAGS :
COMMENTS