[ad_1]
"இளைஞர்கள் அரசியல் ஆர்வம் இருந்தால் காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு வழங்கப்படும்; முன்வாருங்கள்” எனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராகக் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். மீண்டும் நேரு குடும்பத்தின் கையில் காங்கிரஸ் கட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியலில் 'பப்பு'வாக பார்க்கப்பட்டாலும் ராகுல் பன்முகத்திறமைகொண்டவர். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவிடம் படுதோல்வியடைந்தது. தற்போது, 6 மாநிலங்களில்தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது.
இத்தகைய சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சு, மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும்விதத்தில் இருக்கும். இந்த வகையில் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி தனது புதிய செய்தி அறிக்கையில், “அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தாராளமாக முன் வரலாம். அரசியலில் தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்புகள் அமையும். காங்கிரஸ் கட்சியும் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளைத் தரும். புதுமுகங்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால், அரசியலில் என்றும் பயம் இருக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
``வாய்ப்புள்ளது; முன்வாருங்கள்!”: இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
TAGS :
COMMENTS