[ad_1]







நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி. குப்தா உட்பட நான்குபேர் குற்றவாளிகள் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களின் தண்டனைகுறித்த விவரம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், முதல் தீர்ப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதுகோடா முதல்வர் பதவி வகித்ததால், இந்த முறைகேட்டின் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இருப்பதாக பி.ஜே.பி. குற்றம் சாட்டியுள்ளது. 


மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதில், பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பல வழக்குகள் நடைபெற்றுவந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜ்ஹரா நிலக்கரிச் சுரங்கத்தை கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கீடுசெய்ததில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை செயலாளர் ஹெச்.சி. குப்தா மற்றும் மூத்த அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, மதுகோடா உள்ளிட்ட நான்குபேரும் குற்றவாளிகள் என்று உத்தரவிட்டார். அவர்களுக்கான தண்டனை விவரம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ-வாக இருந்த மதுகோடாவை, காங்கிரஸ் கட்சி ஆதரித்ததாலேயே அவர் முதல்வர் பதவியேற்றார் என்று பி.ஜே.பி தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");