[ad_1]
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக விடுமுறை கால அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்டவைகளை முன்னிட்டு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் ஜூனியர் நீதிபதிகள் தலைமையிலான விடுமுறை கால அமர்வு அவசரகால வழக்குகளை விசாரிக்கும். அதேபோல், உச்ச நீதிமன்றத்துக்கும் குளிர்கால விடுமுறை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால். இந்த விடுமுறையை எடுக்காமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகளை விசாரித்தார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் விடுமுறை கால அமர்வைத் தலைமை தாங்கும் முதல் தலைமை நீதிபதி இவர் என்ற பெருமையை இதன்மூலம் அவர் பெற்றார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சஞ்சய் கிஷான் ஆகியோர் அடங்கிய அமர்வு விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரும் வழக்குகளை டிசம்பர் 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடி அளவுக்கு இழப்பீடுகளை வழங்க உத்தரவிட்டது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
விடுமுறை எடுக்காமல் வழக்குகளை விசாரித்த முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!
TAGS :
COMMENTS