[ad_1]
இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா தனது வளைகாப்பு நிகழ்வில் ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படங்களை திடீரென வெளியிட்டு, அந்த நிகழ்வு குறித்த சில சம்பவங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதற்கு தினகரன்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், “என்னைக் கேட்காமலே இந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்” என்று தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
இந்த வீடியோ வெளியானதற்கு சசிகலா குடும்பத்திலே கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது கண்டனத்தை முகநூல் வழியாகத் தெரிவித்தார். “டி.டி.வி. தினகரனின் உடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரனமான செயல்” என்று அந்தப் பதிவில் சொல்லியிருந்தார். இந்த பதிவுக்கு, பதில் சொன்ன தினகரன் “சீப் பப்ளிசிட்டிக்காகச் சொல்லப்படும் கருத்துகள்” என்று சொல்லியிருந்தார்.
இதனால், கிருஷ்ணப்ரியாவுக்கும், தினகரனுக்கு இடையே விரிசல் அதிகமானதாகக் கூறப்பட்டது. மேலும் கிருஷ்ணப்ரியா அடுத்த ஆண்டு அரசியலுக்கு தான் வரப்போவதாக அறிவித்தார். தினகரன் தரப்புக்கு செக் வைக்கும் விதத்தில் கிருஷ்ணப்ரியா அரசியலுக்குள் என்ட்ரியாகப் போவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ணப்ரியா தனது வளைகாப்புப் படங்களைப் பகிர்ந்துள்ளார். 2005-ம் ஆண்டு போயஸ் கார்டனில் நடைபெற்ற கிருஷ்ணப்ரியாவின் வளைகாப்பு நிகழ்வில் ஜெயலலிதா கிருஷ்ணப்ரியாவுக்கு வளையல் போடுவது போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த முகநூல் பதிவில் “இப்புகைப்படங்கள், 2005-ம் ஆண்டு, அம்மா அவர்கள் போயஸ் இல்லத்தில், எனது வளைகாப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை. சில நினைவுகள் நம் மரணம் வரை கூடவே பயணிக்கும். அவற்றுள் இதுவும் ஒன்று. எங்களது மூன்று அன்னைகளில் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்ற உண்மையை இன்னமும் எங்களின் மனம் நம்ப மறுக்கிறது. எனக்கு வளைப்பூட்டும்போது, அம்மா அவர்கள் பாடிய, ‘என்ன தவம் செய்தனை யசோதா’ என கிருஷ்ணனுக்காக மீரா பாடிய பாடலை, எனக்காக நான் எதிர் பார்க்காத நேரத்தில் பாடியது, இன்னமும் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற நிலையில் நேற்று கிருஷ்ணப்ரியா, “சின்னம்மா மீது மக்களுக்கு கொண்டுள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி” என்றே ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தினகரனுக்கு செக் வைக்கும் விதத்தில் ஜெயலலிதாவுக்கும் தனக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்பதை வெளிஉலகுக்குக் காட்ட தொடங்கியுள்ளார் கிருஷ்ணப்ரியா’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வளைகாப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்த கிருஷ்ணபிரியா... தினகரனுக்கு பதிலடியா?
TAGS :
COMMENTS