[ad_1]





பசுவைக் கடத்தினாலோ கொன்றாலோ நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.




இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை விதித்து மத்திய பா.ஜ.க அரசு அரசாணை பிறப்பித்தது. அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாகக் கேரளா மற்றும் மேற்குவங்க மாநில அரசுகளே கண்டனம் தெரிவித்தன. மேலும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. அதைத் தொடர்ந்து அந்த அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்தநிலையில், பசுவைக் கடத்தினாலோ கொன்றாலோ நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் பசுவைக் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஜாஹீர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அவர் கைது செய்யப்படும் முன்பு, பசுவைக் கடத்தியதாக ஒரு கும்பல் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தானின் ராம்கர்க் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கியான்தேவ் அஹுஜா, ‘என்னால் ஒன்று மட்டுமே சொல்ல முடியும். பசுவைக் கடத்தினாலோ கொன்றாலோ நீங்கள் கொல்லப்படுவீர்கள்’ என்றார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை மறுத்த அஹூஜா, ‘பசுக்கள் ஏற்றிச்சென்ற அந்த வாகனத்தைப் பொதுமக்கள் துரத்தினர். அப்போது, வேகமாகச் சென்ற அந்த வாகனம், கவிழ்ந்தது. அதில் காயமடைந்த அந்தக் குறிப்பிட்ட நபர், பொதுமக்கள் தன்னைத் தாக்கியதாகப் புகார் கூறிக்கொண்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் விசாரித்த பிறகே நான் கூறுகிறேன். பொதுமக்கள் அவரைத் தாக்கவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");