[ad_1]
’தங்கல்’ திரைப்பட நாயகி சைரா வாசிம் விமானத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை கண்ணீருடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தங்கல் படத்தில் ஆமீர்கானுக்கு மகளாக நடித்தவர் 17 வயதான சைரா வாசிம். அவர் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது பின்னால் அமர்திருந்த சக பயணி ஒருவர் நள்ளிரவில் காலை கொண்டு தன்னை சீண்டியதாகவும், அந்த நபர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் ‘இதுதான் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பா? தட்டி கேட்க யாருமேயில்லை.. பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இது மிகவும் மோசமான அனுபவம்’ என்று கண்ணீர் விடுகிறார் சைரா. விமான நிலையத்தில் இருந்தவாறே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார் சைரா. இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்துவோம் என்று விஸ்தாரா விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’தட்டி கேட்க யாருமில்லை.. இது மோசமான அனுபவம்!’ - இன்ஸ்டா வீடியோவில் கண்ணீர்விட்ட தங்கல் நாயகி
TAGS :
COMMENTS