[ad_1]

பெரியார் புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் புலிகளை நேரடியாகக் காணும் வகையில், அடர்ந்த வனத்துக்குள் ட்ரெக்கிங் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.




தேக்கடியில் உள்ள இந்தப் புலிகள் காப்பகம், 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள, அணையில் படகுச் சவாரியின்போது குடிநீர் அருந்த வரும் விலங்குகளைக் காண்பது வழக்கமானது. மான், மிளா, யானைக்  கூட்டங்கள், காட்டெருமை போன்ற வனவிலங்குகளைப் பார்க்கலாம். ஆனால், பெரியார் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனத்துக்குள் ட்ரெக்கிங் அழைத்துச் செல்லவிருப்பது பலருக்கும் தெரியாது. சுற்றுலாப் பயணிகளை வாரம் மூன்று முறை வனத்துக்குள் ட்ரெக்கிங் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 

திங்கள்கிழமைத் தொடங்கி புதன்கிழமை வரை, அதாவது 3 பகல் இரு இரவுகள். புதன்கிழமை தொடங்கி வெள்ளி வரை, அடுத்ததாக வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று குழுக்களாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள் காலை 8:45 மணிக்கு பெரியார் புலிகள் காப்பகத்துக்கு வந்துவிட வேண்டும். இந்தியர்களுக்கு 33 ரூபாய் வெளிநாட்டவர்களுக்கு 450 ரூபாய் என நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குக் குறைந்தவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி கிடையாது. ட்ரெக்கிங் செல்வதற்கு முன், உடல் தகுதித்திறன் சோதனை நடத்தப்படும். காலை 9:30 மணிக்கு அணையின் படகுத்துறையில் இருந்து படகில் சுற்றுலாப் பயணிகள் அடுத்த கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து, வனத்துக்குள் ட்ரெக்கிங் தொடங்கும். 



முதல் கேம்பில் லெமன் டீயும் மதிய உணவும் வழங்கப்படும். அங்கே, ஓடும் ஓடையில் குளித்து ரெஃப்ரேஷ் செய்துகொள்ளலாம். மீண்டும் 3 மணிக்குத் தொடங்கும் ட்ரெக்கிங்கில், 12 கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மீண்டும் கேம்ப்புக்குத் திரும்பும் குழுவினர் ஓய்வெடுக்கலாம். வனவிலங்குகள் தாக்கிவிடாத வகையில் கேம்பைச் சுற்றி அகழி வெட்டப்பட்டுள்ளது. இரவில் ஓடைக்கரையில் நடத்தப்படும் கேம்ப் ஃபயர், நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

அடுத்த நாள் காலை 7 மணிக்கு புலிகளைத் தேடி அடர்ந்த வனத்துக்குள் ட்ரெக்கிங் தொடங்கும். இந்த ட்ரெக்கிங்கின்போது உங்களுக்கு வித்தியாசமான அனுபவமும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வனத்தில் 48 புலிகள் உள்ளன. தனிமை விரும்பிகளான அவற்றைக் காண வாய்ப்பு உள்ளது. 600 ஆண்டுகள் பழைமையான ஆலமரங்கள் ட்ரெக்கிங் பாதையில் உள்ளன. அவற்றில் புலிகளின் நகக் கீறல்கள்,  கால் தடங்கள் போன்றவற்றைக் காணலாம். 

இரண்டாவது நாள் இரவு, அடர்ந்த காட்டுக்குள் முல்லைப் பெரியாறு ஆற்றையொட்டியுள்ள, நெல்லிக்காப்பட்டி கேம்ப்பில் தங்கவைக்கப்படுவீர்கள். மூன்றாவது நாள் காலை உணவுடன் ட்ரெக்கிங் நிறைவடையும். இங்கு பி.எஸ்.என்.எல் தவிர வேறு இணைப்புகள் கிடைப்பது கடினம். ஒரு குழுவில் ஆறு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஐந்து வனத் துறையினர், துப்பாக்கி ஏந்திய ஒருவர் பாதுகாப்புக்கு உடன் வருவார்கள். ட்ரெக்கிங், 20 முதல் 35 கிலோமீட்டர் தொலைவுகொண்டது. சூழ்நிலைக்கு ஏற்ப, ட்ரெக்கிங் பாதையில் மாற்றம் செய்யப்படும். 



இரவில் காடுகளுக்குள் டென்ட் அடித்துத் தங்க வேண்டும். சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். மிகச் சிறந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வழிகாட்டிகள் உங்களை வழிநடத்துவார்கள். அதனால், எந்த அச்சமும் தேவையில்லை. எனினும், காடுகளில் எப்போது என்ன நடக்கும் எனச் சொல்லிவிட முடியாது. அதனால், முன்னெச்சரிக்கையாக உங்களிடம் `உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் பொறுப்பல்ல' என்று கையெழுத்தும் வாங்கிக்கொள்கிறார்கள் வனத்துறையினர்.

இரண்டு இரவு மூன்று பகல்கொண்ட இந்த ட்ரெக்கிங் செல்ல 6,000 ரூபாய் முதல் 8,400 ரூபாய் வரை கட்டணம். 8547603066 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புக்கிங் செய்யலாம். பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி, பிளாஸ்டிக் பேக்குகள் கொண்டுச் செல்லக் கூடாது. வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யக் கூடாது. மரங்களில் பெயர்களை கிறுக்கிவைக்கக் கூடாது. ட்ரெக்கிங் செல்வதற்குத் தேவையான பொருள்கள் அங்கேயே கிடைக்கும். அவற்றை, வாங்குவதால் அதைத் தயாரிக்கும் ஆதிவாசி மக்கள் பயனடைவார்கள். டார்ச் லைட், ட்ரெக்கிங் காலணி போன்றவற்றை மறந்துவிட வேண்டாம். 



இந்த ட்ரெக்கிங் எளிமையானதில்லை. வனவிலங்குகளின் குறுக்கீடு, சீதோஷ்ண நிலைகளால் ஏற்படும் உடல்நிலை மாற்றம் என நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். மெடிக்கல் ஃபிட்னெஸ் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. காடுகளில் ஹோட்டல்களில் உள்ளதுபோல, வசதிகள் எதிர்பார்க்கக் கூடாது. உணவு உங்கள் கண் முன்னே தயாரித்து வழங்கப்படும். வயிற்றுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில், தரமான உணவு வழங்கப்படும். ட்ரெக்கிங் முடிந்ததும், குமுளியில் உங்களை வனத்துறையினர் விட்டுவிடுவார்கள். ட்ரெக்கிங் நினைவுகள் மட்டும் உங்களைத் தொடரும்!


pic couresy: periyar tiger reserve
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");