[ad_1]
Puducheri: புதுச்சேரி மாநிலத்தில், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் கோப்புகளின் நிலைகுறித்து இனி பொதுமக்களும் அறிந்துகொள்ளலாம் என ஆளுநர் கிரண்பேடி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இலவச அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறார் என்று முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், கிரண்பேடிமீது குற்றம் சுமத்திவந்தனர். வார இறுதி நாள்களில் ஆய்வுக்குச் செல்லும்போது, அவரை முற்றுகையிட முயற்சிக்கும் மக்களிடமும், 'என்னிடம் எந்த கோப்பும் தேங்கவில்லை. கோப்புகள், ஆளுநர் மாளிகையில் தேங்கியிருக்கிறதா என்பதை ஆளுநர் மாளிகைக்கு வந்து பாருங்கள். அப்படி இல்லையென்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுத் தெளிவுபெறுங்கள்' என்று கூறிவருகிறார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நிதி, பணி நியமனங்கள், மக்கள் நலத் திட்டங்கள்குறித்த பல்வேறு கோப்புகளைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக புதுச்சேரி அனுப்புகிறது. அப்படி அனுப்பப்படும் கோப்புகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்தும், கோப்புகளின் நிலைகுறித்தும் பொதுமக்கள் வெளிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டும். அதனால், இனி வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், ஆளுநர் மாளிகை இணையதளத்தில் கோப்புகள்குறித்த விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட கோப்புகள்மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்த பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கிரண்பேடியின் இந்த அதிரடி நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் புதுச்சேரி அமைச்சர்கள், 'இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத ஒன்றை புதுச்சேரியில் நிகழ்த்த நினைக்கிறார் ஆளுநர்' என்று கொந்தளிக்கின்றனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'கிரண்பேடி இப்படிச் செய்யலாமா ?' - புழுக்கத்தில் புதுச்சேரி அமைச்சர்கள்
TAGS :
COMMENTS