[ad_1]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கும் பேரணிகளுக்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துவருகிறது. முதற்கட்டமாக, கடந்த 9-ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளிள் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சொந்த மாநிலத்தை காங்கிரஸிடம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக, பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல, விரைவில் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் பா.ஜ.க,வை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தியும் சளைக்காமல் பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேரணி செல்லத் திட்டமிட்டிருந்தனர். இரண்டு கட்சிகள் சார்பிலும் நாளை இந்தப் பேரணிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே நேரத்தில் அனுமதி கேட்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி போலீஸார் இரு பேரணிகளுக்கும் அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய அகமதாபாத் நகர் போலீஸ் கமிஷனர் அனுப்குமார் சிங், ‘சட்டம் ஒழுங்குப் பிரச்னை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதியே பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை’என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
குஜராத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு!
TAGS :
COMMENTS