[ad_1]

வெனிசுலா நாட்டில், அடுத்து வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிடக் கூடாது என அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்ததற்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.




லத்தீன், அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, அடுத்து வரும் வெனிசுலா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த வெனிசுலா மேயர் தேர்தலை மூன்று முன்னணி எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதையடுத்து, வருகிற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடத் தடை விதிப்பதாகத் தற்போதைய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகாரப் போக்கைக் காண்பிப்பதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றன. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக, சுதந்திரமாகப் பங்கெடுக்க முழு உரிமையும் உள்ளது. இதற்கான அனைத்துத் தகுதியும் வெனிசுலா மக்களுக்கு உள்ளது” என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");