[ad_1]

கடந்த நவம்பர் மாத இறுதியில், தமிழகம் மற்றும் கேரளாவில் ஒகி புயல் வீசியதில், கடலில் இறந்து போன 42 மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத பரிசோதனை முடித்து கேரளாவில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 மீனவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால், டிஎன்ஏ  பரிசோதனைமூலம் மட்டுமே  அடையாளம் கண்டுப்பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.





அதற்காக, டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 7 உடல்களும், கோழிக்கோடு பகுதிகளில் கரை ஒதுங்கிய 23 உடல்களும் கோழிக்கோடு பகுதிகளில் உள்ள மருத்துவமனை மார்ச்சுவரிகளில் வைக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் 18 உடல்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தில் 6 உடல்களும், திருச்சூரில் 2 உடல்களும், கொல்லத்தில் ஒரு உடலும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன. இந்த உடல்களில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் உடல்கள்  இருக்கிறதா என்று கிறிஸ்மஸ் முடிந்த பின் டிஎன்ஏ பரிசோதனை செய்யபட உள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");