[ad_1]





குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று குஜராத் செல்கிறார். குஜராத்தின் சோம்நாத் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 




குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வெற்றிபெற்று அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 77 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள போதிலும், முந்தைய தேர்தலை விடவும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.  தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, குஜராத் மக்களிடையே காங்கிரஸ் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி தீவிரமாக களப்பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். ”காங்கிரஸ் கட்சி இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளைத் தரும். புதுமுகங்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தாராளமாக முன் வரலாம்” என்று அறிவித்து காங்கிரஸ் கட்சியை புதுபாதையில் கொண்டு செல்ல முனைகிறார் ராகுல். நேற்ற ராகுல் தலைமையில் முதல்முறையாக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடிமட்ட அளவில் கட்சி அமைப்புகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி, குஜராத்தில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 


  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");