[ad_1]

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் 'சக்க போடு போடு ராஜா'. விடிவி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தானம் ஸ்டைலிஷ் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு இசையமைத்திருக்கிறார்.



இந்தப் படத்தின் பாடல் பற்றிய எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது. சிம்பு இசையமைத்திருப்பதாலேயே இந்தப் படத்தில் அனிருத், யுவன், டி.ஆர், மற்றும் சிம்புவின் அம்மா உஷா என பல பிரபலங்கள் பாடல்களை பாடியுள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலான நிலையில் சில நாள்களுக்கு முன்புதான் படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது படக்குழு. விழா மேடையில் படத்தின் பாடலை தனுஷ் வெளியிட படக்குழு பெற்றுக் கொண்டது. ஒரே மேடையில் சிம்பு, தனுஷ் இருந்தது அவர்களின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், விழா மேடையில் தனுஷும், சிம்புவும் பேசிய வீடியோக்கள் எல்லாம் வைரலான நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. படம் இந்த மாதம் 22ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.