[ad_1]

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எம்-களுக்கு தன்னாட்சி வழங்கப்பட லோக் சபா மசோதா நிறைவேற்றியுள்ளது.



ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய நாட்டின் முக்கிய நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இவற்றில் ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்குத் தன்னாட்சி வழங்குவது தொடர்பான மசோதா கடந்த ஜுலை மாதம் நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இது தொடர்பாக லோக் சபாவில் நடந்த விவாதத்தில் ஐ.ஐ.எம்-களுக்குத் தன்னாட்சி வழங்கும் அதிகாரத்துக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஐ.ஐ.எம் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களுக்கும் முதுகலை மற்றும் ஆய்வுப் பட்டம் வழங்குவதற்கு அனுமதியும் சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளன. இனி ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்கான குழு உறுப்பினர்கள் யாரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினர்கள் பதவியில் நீடிக்க முடியாது. அத்தனை நிறுவனங்களின் மொத்த வரவு செலவுகளும் இனி இந்திய அரசுக் கணக்காளர் கணக்கீடு செய்த பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவும் இம்மசோதா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.