[ad_1]
விஜய் டி.வி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ஜூலி இப்போது, விளம்பத்திலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். Working with ARUNA Appalam team was really wonderful. Thank u guys...... pic.twitter.com/r4FH1SsJsY — maria juliana (@lianajohn28) 23 December 2017 மரியா ஜூலியானா கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதில், தமிழக அரசை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு விளையாட்டை வேண்டியும் அவர் முழக்கமிட்டார். அவர் போட்டத்தில் முழக்கமிட்டதை வீடியாவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் சிலர். அந்த வீடியோ மிகவும் வைரல் ஆனது. அதன்பிறகு, அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்தன என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பின்னர், விஜய் டி.வி. நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில், அவரும் ஒரு போட்டியாளாராக உள்ளே நுழைந்தார். பிரபலங்களுக்கும் அவருக்கும் அந்த நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடுகள் வந்தன. மக்களுக்கு அவரின் செயல்கள் சில எரிச்சலூட்டும் வண்ணம் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் அவர் பல விமர்சனங்களுக்கு ஆளார். பின்னர், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அடுத்தபடியாக, நடிகர் விமலுடனும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜூலி. இப்போது, அப்பளம் விளம்பரத்துக்கு நடித்திருக்கிறார். அதை, அவருடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார் ஜூலி.
தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடுத்து இப்போது விளம்பரத்திலும் நடிக்கும் ஜூலி!
TAGS :
COMMENTS