[ad_1]
"ராஜஸ்தானில் பசு கடத்தி செல்பவர்களும், வதை செய்பவர்களும் நிச்சயமாக கொல்லப்படுவார்கள்" என அந்த மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராம்கர் பகுதியில் பசுக்களை கடத்தி சென்றதாக காவல்துறையினர் ஜாகிர் கான் என்பவரை கைது செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்வதற்கு முன்னதாக மர்ம கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கி உள்ளது.
ஜாகிர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராம்கர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ., கயன் தேவ் அகுஜாவிடன் செய்தியாளர்கள் கேட்டபோது, "பசுவை கடத்திச் சென்ற லாரியை பொதுமக்கள் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது வாகனம் நிலைதடுமாறியதாலேயே அவர் காயமடைந்தார். ஆனால் தனது தவறை மறைப்பதற்காக கிராமத்தினர் தான் தன்னை தாக்கியதாக அவர் இப்போது கூறி வருகிறார். அதேபோல, பசு நமது தாய் போன்றது. பசுவை கடத்தினாலோ அல்லது வதை செய்தாலோ அவர் நிச்சயமாக கொல்லப்படுவார்" என்றார் அவர். கயன் தேவ் இந்தப் கருத்துக்கு சமூக ஆர்வலர்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பிருக்கிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ராஜஸ்தானில் பசுவதை செய்வோர் கொல்லப்படுவார்கள் - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
TAGS :
COMMENTS