[ad_1]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல்வேறு அரசியல் திருப்பங்கள், குழப்பங்கள் அரங்கேறின. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் தேர்தல் நடப்பதில் இழுப்பறி நீடித்துவந்தது. ஒருவழியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் களத்தின் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நாளும் வந்துவிட்டது. ஆம், இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் மக்களின் வாக்குகள் தமிழக அரசியல் களத்தையே மாற்றலாம். இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும்.
அடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் ராஜா. அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று முக்கிய நாள்!
TAGS :
COMMENTS