[ad_1]
நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்புக்குப் பின் முத்தலாக் மசோதா பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
Photo Credit: LSTV
மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாகக் கருதி, அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதுகுறித்த விவாதத்தின் போது முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாகக் கருதுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே எடுத்த அ.தி.மு.க.வும் முத்தலாக் மசோதாவில் கிரிமினல் குற்றமாகக் கருதுதல் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை போன்றவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்தநிலையில், உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின்னர் முத்தலாக்கைத் தடை செய்யும் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, முத்தலாக் மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, காங்கிரஸின் சுஷ்மிதா தேவ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.சம்பத் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள், குரல் வாக்கெடுப்பின் வழியே நிராகரிக்கப்பட்டதுடன், முத்தலாக் மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
முத்தலாக் முறைக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
TAGS :
COMMENTS