[ad_1]
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் நடிகர் விக்ரம். அவரின் தந்தை வினோத் ராஜ், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த திருப்பாச்சி மற்றும் கில்லி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். கில்லி படத்தில் நடிகை த்ரிஷாவின் தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய வினோத் ராஜ், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தநிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வினோத் ராஜ் இன்று மாலை 3.30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் அஞ்சலிக்காக மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் தந்தை மறைவு! திரையுலகினர் இரங்கல்
TAGS :
COMMENTS