[ad_1]








ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் தியாகத்தை அரசும், பொதுமக்களும் பேசி வரும் நிலையில், அவரைச் சுட்டதாக சொல்லப்படும் கொள்ளையன் நாதுராமை கைதுசெய்து விரைவில் தண்டனை வழங்க வேண்டுமென்று அனைவரும் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழக காவல்துறையில் இதேபோல் கொல்லப்பட்ட பலருக்கும் சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், அவர்கள் குடும்பங்களுக்கு பொருளாதார உதவியை அரசு செய்யவில்லை என்றும் வழக்கறிஞர் அன்புநிதி நம்மிடம் கூறினார்.மேலும் அவர், "காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பணியின்போது மோசமான முறையில் கொல்லப்பட்ட வழக்குகளை, அதே காவல்துறை அதிகாரிகள் வழக்கை சரியாக நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததில்லை என்பதற்கு  பல உதாரணங்கக்ச் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தலைமை காவலரை அவனியாபுரத்தில் பட்டப்பகலில் கொலைசெய்த வழக்கில் குற்றவாளி ஜோதி விடுதலை செய்யப்பட்டார். கூடல்நகர் ஆய்வாளர் சண்முகசுந்தரத்தை சுட்டுக்கொலை செய்த வழக்கில் இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் கே.பி.ராமலிங்கத்தின் சகோதரர் ஆய்வாளர் ஜோதிலிங்கம் காணாமல் போன வழக்கில் இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அதேபோல் திருநல்வேலியில் ஆள்மாறாட்டத்தில் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதுபோல் இன்னும் பல சம்பவங்கள் உள்ளன.இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டுள்ளார். அவர் எப்படி கொல்லப்பட்டார் என்கிற உண்மையையும், கொன்றவர்களுக்குத் தண்டனையையும் காவல்துறை விரைவில் வாங்கிக் கொடுக்குமா என்று பார்ப்போம். மக்களைக் காக்கும் காவல்துறையினரை, உயர் அதிகாரிகள் காப்பாற்றுவதில்லை. சக ஊழியர் மீதான தாக்குதலுக்கு தண்டனை பெற்றுத் தர முயற்சி செய்யாத, ஆர்வம் காட்டாத அதிகாரிகளுக்கு இடையே பணி செய்ய வேண்டிய நிலையில்தான் இன்றைய காவல்துறையினர் இருந்து வருகின்றனர்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");