[ad_1]
Pudukottai: புதுக்கோட்டை சப் கலெக்டர் சரயுவுக்கு, பேருந்து நிலையம் மிக அருகில் உள்ள சிடி கடை ஒன்றில், ஆபாசப் படங்கள் விற்பனை செய்வதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து, சனிக்கிழமை முன்னிரவு அந்தக் கடையில் ரெய்டு செய்தார். அங்கே ஆபாச படங்கள் அடங்கிய பென்டிரைவுடன் போதைபவுடரான ப்ரௌன் சுகரும் இருக்கவே, சப் கலெக்டர் உள்பட ஒட்டுமொத்த டீமும் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக அந்தக் கடைக்கு சீல் வைத்தார் சப் கலெக்டர் சரயு. கடையின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகி விட்டார். புதுக்கோட்டை நகரில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் கிளப்பியுள்ளது.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பலவருடங்களாக அமைதியோடு செயல்பட்டு வந்த அந்த சிடி கடை, சமீபத்தில்தான் பேருந்து நிலையம் அருகே இடம் பெயர்ந்தது. இதுவரை எந்த ரெய்டிலும் சிக்கியதில்லை.ஆனால்,அந்தக்கடையில், இப்போது ஆபாச வீடியோக்கள்,போதை பவுடர் போன்றவை கையும் களவுமாக பிடிப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் விசயமாக மக்களின் மத்தியில் பேசப்படுகிறது. பல ஆயிரம் பயணிகள் தினமும் வந்து போகும் ஒரு பரபரப்பான பேருந்து நிலையம் அருகில் ,எப்படி ஆபாச வீடியோக்களையும் ப்ரௌன்சுகரையும் விற்பனை செய்யப்பட்டது? அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள் யார்?என்பதை நாம் விசாரித்தபோது,கிடைத்த தகவல்கள் கூடுதல் அதிர்ச்சியை தருவதாக இருந்தது. கல்லூரிமாணவர்கள்தான அந்தக்கடையின்வாடிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள்."பஸ் ஸ்டாண்டுக்கும் பின்னாடி மூன்று பாய்ஸ் ஹாஸ்டல் இருக்கிறது. அங்கு இருக்கிற கல்லூரி மாணவர்கள் இந்தக் கடையின் ரெகுலர் கஸ்டமர். பசங்க கேட்கிற அடல்ட் படங்களை பென்ட்ரைவில் ஏற்றிக் கொடுப்பார்கள். அந்த இளைஞர்களை வெச்சு ப்ரௌன் சுகர் வியாபாரத்தையும் ரகசியமாக பண்ணி இருக்கும் விசயமே இப்போதான் எங்களுக்கு தெரியும்" என்றார் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர்.மாவட்ட உதவி ஆட்சியர் சரயுவிடம் ஆய்வு குறித்துப் பேசினோம். 'அந்தக் கடையில் ஆபாச படங்கள் விற்பனை செய்வதாக உறுதியான தகவல் எனக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நான் மேற்கொண்ட ஆய்வில், ஏராளமான ஆபாச படங்கள் அடங்கிய பென்டிரைவ்வை கைப்பற்றி உள்ளேன். கூடுதலாக, பவுடர் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது ப்ரௌன் சுகராக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் ,கைப்பற்றிய அந்தப் பவுடரை பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறேன். ரிப்போர்ட் வந்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும். அந்தக் கடையில்,'கொடிவீரன்' உள்ளிட்ட ஐநூறு புதுபட சிடிக்களையும் கைப்பற்றி உள்ளோம்"என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மாணவர்களை சீரழிக்கும் சிடி கடை! - போதை பவுடர் விற்பனையும் அமோகம்
TAGS :
COMMENTS