[ad_1]
Chennai:
ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். இந்தச் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியபாண்டியின் கடந்த கால அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் அவருடைய நண்பர்கள்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மூவிருந்தாளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பெரியபாண்டியன். 1969ம் ஆண்டு பிறந்த இவர், சிறுவயது முதலே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். பி.எஸ்.சி. வரை படித்த பெரியபாண்டியன், கடந்த 2000ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார். 2014ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். 10.10.2017 முதல் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றார். தற்போது, சென்னை ஆவடி வசந்தம் நகர், நேரு தெருவில் குடும்பத்துடன் குடியிருந்துவந்தார்.
திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பெரியபாண்டியன் இருந்த சமயத்தில் துரிதமாகச் செயல்பட்டார். அதன்பிறகு அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். அப்போது, பல குற்றவழக்குகளைக் கண்டறிந்தார். இச்செயல்களால் காவல்துறையில் பெரியபாண்டியனின் பெயர் பிரபலமானது. தனிப்படை போலீஸ் டீமில் சேர்க்கப்பட்டு பல தடவை வடமாநிலங்களுக்குச் சென்று குற்றவாளிகளைக் கைது செய்துவந்துள்ளார். இந்தமுறை வடமாநிலத்துக்குச் சென்றபோதுதான் அவருக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றும் பெரியபாண்டியனின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். "பெரிய பாண்டியை காவல்துறை இழந்தது வருத்தமளிக்கிறது. அவரது பிரிவு எங்களைக் கடும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பெரியபாண்டியனை நாங்கள் எல்லோரும் பிக்பாண்டி என்றுதான் செல்லமாக அழைப்போம். குடும்பத்தினர் மீது அதிக பாசம் கொண்டவர். டூயூட்டி முடிந்தவுடன் வீட்டுக்குச் சென்று பொழுதை கழிப்பார். எந்தவித கெட்டப்பழக்கமும் அவருக்குக் கிடையாது. அதே நேரத்தில் துணிச்சல் மிக்கவர்.
அமைந்தகரை குற்றப்பிரிவில் பெரியபாண்டியன் பணியாற்றிபோது, பல சிக்கலான வழக்குகளைக் கண்டறிந்துள்ளார். போலீஸ் உயரதிகாரிகளிடையே நல்ல பெயரும் அவருக்கு உண்டு. இதுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் சிக்காதவர். அவரது நடவடிக்கைகளைப் பார்த்து எங்களுக்கே பொறாமையாக இருக்கும். அவருக்கு பானுரேகா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகன் 12ம் வகுப்புப் படித்தபோது அவருடைய படிப்பிற்காக உளவுப்பிரிவில் சேர விரும்பினார். உளவுப்பிரிவில் காவல் நிலையம் போல வேலை இருக்காது. இதற்காக உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். அவரது திறமைக்குக் கிடைத்த பரிசாக இடமாற்றமும் கிடைத்தது. உளவுப்பிரிவில் சேருவார் என்று எதிர்பார்த்த சமயத்தில் சில காரணங்களால் மீண்டும் காவல் நிலையத்திலேயே இன்ஸ்பெக்டராக பணியைத் தொடர்ந்தார் பிக்பாண்டி. நெல்லை ஸ்லாங்கில் பேசும் பெரியபாண்டியனின் பேச்சை இனிமேல் எப்போதும் கேட்க முடியாது" என்றனர் வருத்தத்துடன்
அடுத்து பேசிய இன்னொரு இன்ஸ்பெக்டர், "பெரியபாண்டியனுக்கு நிகழ்ந்தது இனியாருக்கும் ஏற்படக் கூடாது. வெளிமாநிலங்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது உள்ளூர் போலீஸாருக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் தெரிந்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம். இதனால், பெரிய கிரிமினல் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது உள்ளூர் போலீஸாரின் உதவியை நாங்கள் நாடுவதில்லை. பெரியபாண்டியன் சம்பவத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் இனிமேல் வடமாநிலங்களுக்கு கிரிமினல் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்பவர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்லவேண்டும். வடமாநில கிரிமினல்களுக்கும் தமிழக கிரிமினல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. வடமாநில கிரிமினல்கள் சர்வசாதாரணமாக துப்பாக்கியைப் பயன்படுத்துவார்கள். இதுஎல்லாம் பெரியபாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் யோசித்துதான் பெரியபாண்டியன் களத்தில் இறங்கியிருப்பார். பெரியபாண்டியனைத் தாக்கிய கிரிமினல்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. விசாரணை முடிவில்தான் பெரியபாண்டியன் வழக்கில் உள்ள மர்மமூடிச்சுகள் அவிழும்.
பெரியபாண்டியனைச் சுட்டது பிரபல கிரிமினல் நாதுராம் என்று முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவரது உறவினர்கள் அனைவரும் செங்கல் சூளையில் வேலைபார்க்கின்றனர். தற்போது, நாதுராமின் உறவினர்களில் 9 பேரை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், வடமாநிலங்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் தமிழக போலீஸாருக்குப் பெரியபாண்டியனின் மரணம் ஒரு பாடம்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'துணிச்சலுக்கு மறுபெயர் இன்ஸ்பெக்டர் பிக்பாண்டி!' - அனுபவங்களைப் பகிரும் நண்பர்கள்
TAGS :
COMMENTS