[ad_1]
`குஜராத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் அரசின் முக்கிய பிரதிநிகளுடன் சந்தித்து ஆலோசித்துள்ளனர்' என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது குறித்து மன்மோகன் சிங், `பிரதமர் மோடியின் இத்தகைய கருத்து என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. அரசியல் ஆதாயம் அடையவே இப்படிப்பட்ட கருத்தை மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று பதிலடி கொடுத்தார். இதை ஆமோதித்து காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ``பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங் குறித்து கூரிய கருத்து ஏற்புடையதல்ல. அவர் குஜராத் தேர்தல் குறித்தான பிரசாரங்களில் ஊழல் குறித்து பேச மறுக்கிறார். அமித்ஷாவின் மகன் ஜே ஷாவின் விஷயம் குறித்து அவர் பேசுவதில்லை. மாறாக, மன்மோகன் பற்றி அவதூறான கருத்தைக் கூறியுள்ளார். என்னவானாலும், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி' என்று தெரிவித்துள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`மன்மோகன் குறித்து மோடி கூறியது ஏற்புடையதல்ல' - பொங்கும் ராகுல் காந்தி
TAGS :
COMMENTS