[ad_1]
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி ரெய்டு நடத்தியதற்கான காரணத்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவத்துக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். பெற்றோர் மாணவர் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காலாப்பட்டில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது என்றும் ஆவணங்கள் அழிக்கப்படும் முன்னர் சிபிஐ உடனே சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதையடுத்து சென்டாக்கில் சோதனை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், 2 ஐஏஸ் அதிகாரிகள், சென்டாக் கன்வீனர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் என 13 பேர் வழக்குப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து இதற்கிடையில் சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாபு, சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ், இணை கன்வீனர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனாதன் உள்ளிட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து விடுதலையடைந்தனர். அதையடுத்து சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரியில் தொடர்ந்து முகாமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில்தான் நேற்று முன் தினம் (07.12.2017) புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 6 பேர் கொண்ட இந்தக் குழு சென்டாக் கன்வீனரும், அரசு மருத்துவக் கல்லூரியின் இயக்குநருமான கோவிந்தராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தியது. அப்போது அவரது அறையில் உள்ள முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. முதுநிலை மருத்துவ சீட் சேர்க்கையில் நடந்த முறைகேட்டின் தொடர்ச்சியாகவே இந்த ரெய்டு நடந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி கதிர்காமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த சிபிஐ சோதனை குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. ரங்கசாமி தலைமையிலான முந்தைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அரசு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் மூலம் 770 ஊழியர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான கோப்பு அப்போதைய கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகத்தான் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்” என்று தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிஐ ரெய்டுக்கான காரணம் இதுதான்... சொல்கிறார் நாராயணாசாமி
TAGS :
COMMENTS