[ad_1]
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார்.
Photo Credit: BCCI
18 வயது இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர், முதலில் இலங்கை அணிக்கெதிரான டி20 போட்டிக்கான அணியில் மட்டுமே இடம்பெற்றிருந்தார். கடைசி நேரத்தில், ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ் காயமடையவே, மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால், கடும் நெருக்கடியுடன் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்தப் போட்டியில், அறிமுக வீரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகிறார். போட்டிக்கு முன்னதாக, மைதானத்தில் அவருக்கு இந்திய அணியின் தொப்பியைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வழங்கினார்.
ஆஃப் ஸ்பின்னில் அசத்தும் வாஷிங்டன் சுந்தர், பேட்டிங்கிலும் கலக்கும் வல்லமைபெற்றவர். ஐ.பி.எல்., டி.என்.பி.எல் மற்றும் ரஞ்சிக் கோப்பைத் தொடர்களின் மோஸ்ட் வாண்டட் ஆல்ரவுண்டராக வலம்வந்த வாஷிங்டன் சுந்தர், இன்றைய போட்டிமூலம் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகிறார். மொஹாலியில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்களுடன் இலங்கை அணி களமிறங்கும் நிலையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!
TAGS :
COMMENTS