[ad_1]
புத்தாண்டு கொண்டாட்டங்களை வரும் 31-ம் தேதி நள்ளிரவு 1 மணியுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய நீடிக்கும். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச், கிழக்கு கடற்கரை சாலை என புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். அதேபோல, நட்சத்திர விடுதிகளிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து நட்சத்திர விடுதிகளின் நிர்வாகிகளுக்கு அறிவுறைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில முக்கியமான கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டது. அதன்படி, பொழுது போக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு, 31.12.2017 அன்று மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை, கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும்.
நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல், மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும். நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள் , கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். விடுதியின் நீச்சல் குளங்கள் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணிவரை மூடிவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டன.
மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விடுதி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடு
TAGS :
COMMENTS