[ad_1]





டெல்லியில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது, சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 


 


டெல்லியில், கால்காஜி மந்திர் – பொட்டானிக்கல் கார்டன்  வழித்தடத்தில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், இந்த மெட்ரோ ரயில் சேவையை பிரதமர்  மோடி கொடியசைத்துத் தொடங்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.


 

இந்நிலையில், காலின்டி குன்ஜ் பணிமனையிலிருந்து சோதனை ஓட்டத்துக்காக நேற்று மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த ரயில், மெதுவாகப் புறப்பட்டது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தின் கடைசிப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர்மீது வேகமாக மோதியது. சுவர் உடைந்தது மட்டுமன்றி, ரயிலின் இரண்டு பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்துகுறித்து பேசிய டெல்லி மெட்ரோ ரயில் அதிகாரி, ‘ ரயிலின் பிரேக் செயல்பாட்டை சரிபார்க்காமல் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு பிரேக் ஃபெயிலர் ஆனதுதான் காரணம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");