[ad_1]

Chennai: தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆர்.கே. நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 






ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மருதுகணேசை ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துள்ளன. இன்று ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேட்டில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் பேசிய வைகோ, “மதவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டவிரோத ஆட்சி நடக்கிறது. மாநில சுயாட்சி பறிபோய் விட்டது. தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆக வேண்டும். மு.க. ஸ்டாலினை முதல்வராக அழைக்கக் கூடிய காலம் வெகுவிரைவில் வரும்” என்றார்.
திருமாவளவன் பேசும்போது, “ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்” என்றார். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");