[ad_1]





Chennai: நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 40 ஆயிரத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க , நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை இழந்தனர். இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் தினகரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தபோதே தினகரன் வெற்றி பெறுவார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  




மேலும், 2019-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலை ஒருங்கிணைந்த அ.தி.மு.க, தினகரன் தலைமையில் எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். தான் உறுப்பினராகவுள்ள பா.ஜ.க.வை நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்றதை, `நாட்டை ஆளும் கட்சி நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்குவதா?' எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு வாழ்த்து சொன்ன சுபர்ரமணியன் சுவாமிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில், `உங்களின் ஆதரவுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி' எனத் தெரிவித்திருந்தார். அதற்கு சுவாமியும், பகீர் ரிப்ளை ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");