[ad_1]

மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று அதன் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.




குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸூம் பலம் பொருந்திய எதிர்கட்சியாக தேர்ச்சிபெற்றுள்ளது. இரு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இரு மாநிலத்திலும் அமையப்போகும் புதிய அரசுக்கு வாழ்த்துகள். எனக்கு அளவற்ற அன்பைக் காட்டிய குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய காங்கிரஸ் கட்சியின் சகோதர சகோதரிகள், நீங்கள் என்னைப் பெருமைப்படவைத்துள்ளீர்கள். நீங்கள் யாருடன் போட்டியிட்டீர்களோ அவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். ஏனென்றால், நீங்கள் கோபம் மற்றும் கண்ணியத்துடன் போட்டியிட்டீர்கள். ஒழுக்கம் மற்றும் தைரியம்தான் காங்கிரஸின் மிகப் பெரிய பலம் என்பதை அனைவருக்கும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.