[ad_1]
பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இன்று கடல் விமானத்தில் பயணம் செய்தார். கடல் விமானம் மூலம் சபர்மதி ஆற்றின் வழியாக தாரோய் அணைப் பகுதிக்குச் சென்றார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அகமதாபாத்தில் அரசியல் கட்சிகளிள் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சொந்தத் தொகுதி என்பதால் பிரதமர் மோடி, பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஜராத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், நேற்று அகமதாபாத்தில் மோடியும், ராகுல் காந்தியும் சாலை வழியாக வாகனத்தில் சென்று ஆதரவு திரட்ட அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழும் என்று கூறி இரு தலைவர்களுக்கும் சாலை வழி பிரசாரம் செய்யத் தடை விதித்துள்ளது அகமதாபாத் போலீஸ். இதனால் சாலை வழி பிரசாரம் செய்யும் ப்ளான் A (Plan A) தோல்வியடைந்ததால், கடல் விமானம் மூலம் சபர்மதி செல்லும் ப்ளான் B ஐ செயல்படுத்தியுள்ளார் மோடி. அதன்படி பயணத்திட்டம் மாற்றப்பட்டு கடல் விமானம் மூலமாக தாரோய் அணைப் பகுதிக்கு விசிட் அடித்துள்ளார். மேலும், அம்பாஜியில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இதுவும் ஒருவிதமான பிரசாரம்தான் என்கிறது அரசியல் வட்டாரம்.
Tomorrow at 9:30 AM I will travel from Sabarmati River in Ahmedabad to Dharoi Dam via sea plane. After that will offer prayers to Maa Amba at Ambaji. With air, roads & rail connectivity, our Government is making efforts for harnessing waterways. All this is for 125 crore Indians!
— Narendra Modi (@narendramodi) December 11, 2017
இந்தியாவின் முதல் கடல் விமானச் சேவை குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, ‘கடல் விமானம் மூலமாக தாரோய் அணைப்பகுதிக்குச் செல்கிறேன். சாலை வழி, வான்வழி என நீர்வழிகளை இணைக்க அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இவை அனைத்துமே 125 கோடி இந்திய மக்களுக்காகதான்” என்று குறிப்பிட்டுள்ளார். குஜராத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தடை போட்ட போலீஸ்! - 'ப்ளான் B' செயல்படுத்திய மோடி
TAGS :
COMMENTS