[ad_1]





இந்தியப் பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல்ஸ் துறையின் பங்குகள் தற்போது உச்சத்தில் உள்ளன.




உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர்ப் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தையும் கடந்து இன்றைய இந்தியப் பங்குச்சந்தையின் நிலவரம் உச்சத்தில் நிலைகொண்டுள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 121.06 புள்ளிகள் உயர்ந்து 33,587 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 44.85 புள்ளிகள் உயர்ந்து 10,379 புள்ளிகளாக உள்ளது.


இந்தியப் பங்குச்சந்தை வீழ்ந்தாலும், தொடர்ந்து 32,000 புள்ளிகள் அருகிலேயே நிலைத்திருப்பது வணிகர்களை மகிழ்ச்சியிலேயே வைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி, உலோக நிறுவனங்களின் பங்குகள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் துறையின் பங்குகள் உச்சத்தில் உள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலர்களின் மதிப்பில், ஒரு டாலர் 64.09 ரூபாயாக உள்ளது. வங்கித்துறை வரிசையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகள் அதிகப்படியான வளர்ச்சியில் உச்சத்திலேயே நீடிக்கிறது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");