[ad_1]







அணு குண்டுகள் முதல் நவீன ஆயுதங்கள் வரை வைத்திருக்கும் வல்லரசு நாடுகளே "சைபர் அட்டாக்" என்றால் சற்று பயப்படத்தான் செய்யும். டிஜிட்டல் உலகைப் பொறுத்தவரையில் எங்கே எப்பொழுது சைபர் தாக்குதல் நடைபெறும் என்பதைச்  சொல்ல முடியாது. அதே வேளையில், தாக்குதல் தொடங்கிவிட்டால் அதை நிறுத்துவது கடினமான விஷயம்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதலை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. உலகம் முழுவதும் நடந்த இந்தத் தாக்குதலுக்குச் சில நாடுகளின் அணு உலைகளில் இருக்கும் கணினிகள் கூட பாதிப்படைந்தன.


சைபர் அட்டாக்  என்பது வெறுமனே வைரஸ் தாக்குதல் மட்டும் கிடையாது. தகவல் திருட்டு, பாஸ்வேர்ட் திருட்டு என பல பிரச்னைகள் உண்டு. இரண்டு நாடுகளுக்குள் நடக்கும் சைபர் போர்கள் மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற சைபர் போர்களுக்காக உருவாக்கப்படுவதுதான் வான்னாக்ரை போன்ற ரான்சம்வேர்கள் என்றும், இலக்குகள் மாறிவிடுவதால் அவற்றால் மற்றவற்றுக்கும் சேதம் அதிகமாகிறது என்பதும் ஒரு சிலரின் சந்தேகம். எது எப்படி இருந்தாலும் பாதிப்பு என்று வந்துவிட்டால் அதை சரி செய்ய வேண்டுமே. அதற்காகவே பல தனிநபர்களும், பல ஆன்டி வைரஸ் நிறுவனங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது போன்ற நிறுவனங்கள் சைபர் தாக்குதலை தவிர்க்கவும், இருக்கும் பாதிப்பைச் சரி செய்யவும் முயன்றுகொண்டிருக்கின்றன.



இதற்காக உலகம் முழுவதும் பல்வேறு கணினிகளிலிருந்து பெறப்படும் தரவுகள் ஆராயப்படும். ஒரு கணினியிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் சந்தேகத்துக்குரிய தகவல்களை ஆன்டி வைரஸ் நிறுவனங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு புதிய மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்பொழுது, இணையத்தைப் பயன்படுத்தும்பொழுது ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் அவற்றை ஆராயும். ஏதாவது ஒரு டேட்டா சந்தேகமாக இருக்கும்பட்சத்தில் அவற்றை சேகரித்து அவற்றில் தவறுகள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கும். இப்படி வரும் சந்தேகத்துக்குரிய தரவுகளைப் பெரும்பாலும் மனிதர்களே ஆராய்வது வழக்கம். அந்த வேலையை இனிமேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், மெஷின் லேர்னிங் தொழில்நுட்பமும் இணைந்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் பின்லாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான F-Secure.

AI மற்றும் மெஷின் லேர்னிங் இந்த இரண்டு தொழில்நுட்பங்களுமே சுயமாக சிந்திக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதைத்தான் தகவல்களை ஆராய்வதற்காக பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது F-Secure நிறுவனம். "ஒரு நாளைக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500,000 க்கும் மேற்பட்ட டேட்டாக்கள் எங்கள் ஆய்வகத்துக்கு வருகின்றன. அதில் 10,000 க்கும் மேற்பட்டவை மால்வேர் வகை டேட்டா. இதுதவிர 60,000 க்கும் மேற்பட்ட இணையதள முகவரிகளும் எங்களுக்கு வருகின்றன" என்கிறார் F-Secure நிறுவனத்தைச் சேர்ந்த சல்லிவன்.


"இவ்வளவு பெரிய அளவில் பெறப்படும் தகவல்களை மனிதர்களால் சரிபார்ப்பது என்பது சற்று கடினமான காரியம்  AI மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் அவற்றை எளிதாக சரி பார்க்க உதவும். இதனால் மனிதர்களின் வேலைப்பளு குறையும்" என்றும் கூறுகிறார். எப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கும் இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதர்களை விடவும் வெகுவிரைவில் சைபர் தாக்குதல்களைக் கண்டறிந்துவிடும். டேட்டாக்கள்தான் வருங்கால உலகம் எனும்பொழுது அதற்குத் தகுந்தவாறு இந்தத் தொழில்நுட்பங்கள் செயல்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");