[ad_1]
ஒகி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க 9,302 கோடி ரூபாய் தேவை எனப் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளையும் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார். அதில், ''குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்பு கடுமையானதாக இருந்தது. இதில், உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் ஊனமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வுக்காக 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
ஒகி புயலால் சேதம் அடைந்த வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.63,000 வரையிலும் வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ரப்பர், கிராம்பு, பிற வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. குமரி மாவட்டம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் இதைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பிரத்தியேகக் கடற்படை நிலையம் அமைக்க வேண்டும். அதில் தேடுவதற்குத் தேவையான ஹெலிகாப்டர்கள், இறங்கு தள வசதிகள், தொலைத்தொடர்பு வசதி ஆகியவற்றுடன் விரைவில் அதை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
ஒகி புயல் பாதிக்கப்பட்டதால் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 747 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்க வேண்டும். தற்போது பேரிடருக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி அளிக்க வேண்டும். பயிர் பாதிப்புக்கான நிவாரண நிதியையும் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக கடலோரங்களில் உயர் மின் அதிர்வெண் (ஹை பிரிக்குவன்சி) கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். குமரி மாவட்ட மீனவர்களுக்காகத் தொலைத்தொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடனும்கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கடல் அலை தடுப்புச் சுவர்கள் அமைத்துத் தர வேண்டும். இவற்றுக்காக 4,218 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஒகி புயல் சேதங்கள், மீட்பு, நிவாரணம் மற்ற நிரந்தர ரூ.5,255 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும்.
சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும் இனி சென்னைக்கு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர சீரமைப்புப் பணிகளைச் செய்யவும் 4,047 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆகவே, ஒகி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாகத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பேரிடர் பாதிப்புக்கு ரூ.9,302 கோடி தேவை! பிரதமர் மோடியிடம் கேட்ட முதல்வர் பழனிசாமி
TAGS :
COMMENTS