[ad_1]
ஆறு வெவ்வேறு தொகுதிகளிலிருந்து 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், 3 முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவர். இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் வாஜ்பாய். இந்தியா ஒளிர்கிறது என உரக்க முழங்கியவரின் குரல்கள் இன்று ஒலிக்க துடித்து முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது.
வாஜ்பாய் எனும் உன்னத தலைவரின் வாழ்க்கை இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத காலம். இந்தியாவில் பிஜேபி காலூன்ற காரணமாக இருந்த தலைவர். 1996ம் ஆண்டு 13 நாட்கள், 1998ம் ஆண்டு 13 மாதங்கள் என பிரதமராகியது பல சோதனைகளை சந்தித்தாலும் 1999 முதல் 2004 வரையிலான பிஜேபியின் ஆட்சிக்கு அச்சாரம் வாஜ்பாய் தான். காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் 5 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தார் என்றால் அவர் வாஜ்பாய் மட்டும் தான். வாய்பாய் எனும் கம்பீரமான மனிதனின் கனீர் குரலை இந்தியா கடைசியாக 2007ம் ஆண்டு லக்னோ பாராளுமன்ற தொகுதியில் கேட்டது. இந்தியாவின் நம்பிக்கை குரல், வளர்ச்சிக்குரல் என்று கூறப்பட்ட வாஜ்பாயின் குரல்கள் சிறு சத்தங்களாக கிருஷ்ண மேனன் மார்க்கில் அருகில் இருப்பவரின் காதுகளை கூட எட்டாத ஒலியாக இருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா கிடைத்த போதுகூட அவரது ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. அதிலும் முகம் தெளிவாக தெரியவில்லை. அதைத்தாண்டி எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. 9 ஆண்டுகளாக வாஜ்பாய் முகம் மக்கள் கண்ணில் படவே இல்லை. பிஜேபியின் பிரசார விளம்பரங்களிலும் சிறியதாகவோ அல்லது சில நேரங்களில் பெயரோடோ சுருங்கி போனது வாஜ்பாய் எனும் இந்தியாவின் மூத்த அரசியல் முகம். 2009க்கு முன்பு வரை ஓரளவு செயல்பாட்டில் இருந்த வாஜ்பாயின் உடல்நிலை 2009க்கு பிறகு சற்று தளர்ந்து போனது. வீல் சேர்களில் இருந்த வாஜ்பாய் தற்போது பெரும்பாலான நேரத்தை படுக்கையிலேயே கழிக்கிறார். குடும்பத்தார் தான் முழுவதும் உடனிருக்கிறார்கள். உடல் அசைவுகள் தான் அவ்வப்போது உள்ளது. முழுநேர மருத்துவ பரிந்துரையில் இருக்கிறார். அவ்வப்போது பிஜேபியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது அதுவும் குறைந்துள்ளது. கை , கால் செய்ல்பாடுகள் முற்றிலுமாக குறைந்து படுக்கையில் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவராய் இருக்கிறார் வாஜ்பாய். இன்று பிறந்தநாள் அன்று பிரதமரும், அமித்ஷாவும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர். அதுகூட குடும்பத்தினருடன் உரையாடும் காட்சிகளாக தான் காட்டப்பட்டன. வாஜ்பாயின் தற்போதைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஓய்வில் இருப்பதை காட்டாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாய்பாய் உடல்நிலை மோசமாக தொடங்கிய போதும் கூட தினசரி செய்தி சேனல்களை பார்ப்பது. லதா மங்கேஷ்கர் இசையில் நனைவது என தன்னை உற்சாகத்தோடு வைத்திருக்கிறார். பொக்ரான் அணு சோதனைக்கு முன்னின்றவர். பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர். இன்று ஆளும் பிஜேபியின் ஆதி. 93 வயதான வாஜ்பாயின் நிலையும் திமுக தலைவர் கருணாநிதியின் நிலை போன்று தான். கருணாநிதி உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். பேச முடியாவிட்டாலும் கனிமொழியை கண்ணீர் நெகிழ பாச முத்தமிடுகிறார். ஸ்டாலின், துரைமுருகன் போன்ற குரல்களை அடையாளம் கண்டு முகத்தால் பதிலளிக்கிறார்.
வாஜ்பாய் இது போன்ற தருணங்களை உணரும் நிலையில் இல்லை. இந்தியா ஒளிர்கிறது என்று முழங்கிய அதே குரல்கள் ஒலிக்க மறுத்தாலும் உணர்ந்தால் போதும். வளர்ச்சியை நோக்கிய இந்தியாவை வழிநடத்த விரும்பியவர். இந்தியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவரான இவரது கனவை நிஜமாக்கி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுங்கள். அதற்கு வாஜ்பாய் பதில் கூறாவிட்டாலும் கட்டாயம் உணருவார். நம்புங்கள் வாஜ்பாய் இந்தியா ஒளிரும்....
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இந்தியா ஒளிர்கிறது என்ற தலைவருக்கு வயது 93! #AtalBihariVajpayee
TAGS :
COMMENTS