[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த மது விருந்தோடு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ஃபிங்கர் ஃபிஷ், ஃபிஸ் ஃப்ரை என கொடுத்து அமர்களப்படுத்தியுள்ளனர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள்.
ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களிடையே கடும்போட்டி நிலவுகிறது. மண்ணின் மைந்தர்களான மருதுகணேஷ், மதுசூதனன், வீடு, வீடாகச் சென்று வாக்குசேகரித்துவருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக பா.ஜ.க.வேட்பாளர் கரு.நாகராஜன், டி.டி.வி.தினகரன் மற்றும் சுயேச்சைகளும் ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்காக ஆளுங்கட்சி தரப்பிலிருந்து தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சியினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் கட்சியினர், தேர்தல் வேலைகளில் பம்பரமாக ஈடுபட்டுவருகின்றனர். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வார்டுகளில் உள்ள வாக்காளர்களிடம் இரட்டை இலைச் சின்னத்துக்காக ஓட்டுகளை சேகரித்துவருகின்றனர்.
வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும் ஆளுங்கட்சியினர் உண்மையைச் சொல்லி ஓட்டுக்கேட்கின்றனர். அதாவது, 'டி.டி.வி.தினகரனோ அல்லது மற்றவர்களோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியில் எந்தவித நலத்திட்டங்களும் நடக்காது. ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகளிலிருந்து தொகுதியின் வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக நடக்கும். மேலும், ஜெயலலிதா வெற்றி பெற்ற இந்த தொகுதி, தமிழகத்தின் முன்மாதிரியான தொகுதியாக மாற்றப்படும்' என்று சொல்லி வாக்குகளைச் சேகரிக்கின்றனர். அதோடு, இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாபடி வாக்காளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுகின்றனர்.
முதல்கட்டமாக ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை ஆளுங்கட்சியனரால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஆளுங்கட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அந்தப்பகுதியில் உள்ள கட்சியினர் மூலம் எவ்வித தடையுமின்றி வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்று தடவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சியினர் அதிகாலை நேரத்தில் பணப் பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்காளர்களைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் கட்சியினரையும் தேர்தல் பொறுப்பாளர்களான சில அமைச்சர்கள் சிறப்பாக கவனித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆளுங்கட்சி தொண்டர்களுக்கு மது விருந்தோடு அசைவ உணவுகளைக் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியின் அருகில் உள்ள ராயபுரம் தொகுதியில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர். அவர், 80க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தனர். அவருக்குப் போட்டியாக 100 கிலோ வஞ்சிரம், வவ்வால் மீன் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் இன்னொரு அமைச்சர். ஃபிங்கர் ஃபிஷ், ஃபிஸ் ஃப்ரை என கொடுத்து அமர்களப்படுத்தியுள்ளனர்.
மூத்த அமைச்சர் ஒருவர், 500 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து தொண்டர்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஆர்.கே.நகர் தொகுதியில் பவர்புல்லாக பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் அமைச்சர் ஒருவர். இவ்வாறு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் போட்டிபோட்டு விருந்து உபசரிப்பால் தொண்டர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர். விருந்தோடு மட்டுமல்லாமல் மதுவுக்கும் தாராளமாக செலவு செய்யப்படுகிறதாம். ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்.பி. ஒருவரின் தலைமையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு பிரிஞ்ச் சாதமும் ஊறுகாய் அடங்கிய உணவு பொட்டலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள், பிரியாணி விருந்தில் பங்கேற்ற தொண்டர்களிடம் தங்களின் ஆதங்கத்தை புலம்பியுள்ளனர்.
விருந்து நடந்து முடிந்தப்பிறகு அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு ஸ்பெஷல் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாம். அதன்படி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் பாடம் எடுத்துள்ளனர். மது, பிரியாணி விருந்து காரணமாக தேர்தல் பொறுப்பாளர்களின் பேச்சைக் கேட்கும் நிலையில் பலர் இல்லையாம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், "இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமே முதல்வர், துணை முதல்வர் பலத்தை கட்சியினர் மத்தியில் நிரூபிக்க முடியும். இடைத்தேர்தல் ஆளுங்கட்சி தோல்வியடைந்தால் அது, அவர்களுக்கு சரிவை ஏற்படுத்தும். மேலும், ஜெயலலிதா வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தோல்வியடைந்தால் அது கட்சி வரலாற்றில் பிழையாகிவிடும். இதனால், எந்த எல்லைக்குச் சென்றாலும் பரவாயில்லை. தேர்தல் நடந்து அதில் வெற்றிபெற வேண்டும் என்று கட்சித் தலைமையிலிருந்து ஸ்பெஷல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக ஓட்டுகளை பெற்றுக்கொடுக்கும் தேர்தல் பொறுப்பாளருக்கு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கிறது. பிரசாரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கப்படுகிறது. தாராளமாக செலவு செய்யும்படி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளருக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை விருந்து, கவனிப்பு என்று தேர்தல் பொறுப்பாளர்கள் அமர்க்களப்படுத்திவருகின்றனர்" என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘ஓட்டுக்கு துட்டு, 80 ஆடுகள், 100 கிலோ மீன், 500 கிலோ சிக்கன்!’ - ஆர்.கே.நகரை அதகளப்படுத்தும் அ.தி.மு.க. #RKNagarAtrocities
TAGS :
COMMENTS