[ad_1]

‘தண்டனைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.




வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 14 பக்கங்களைக் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு. இதன்படி, 'குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதில் இரண்டு நீதிமன்றங்கள் 228 எம்.பி-க்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும். 65-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். 65-க்கும் குறைவான எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ள மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் தேவையில்லை. அந்த வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 7.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 1,581 வழக்குகளை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் ஓர் ஆண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்' என பிரமாண பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் 1-ம் தேதி முதல் செயல்பட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டிருக்கிறது.



எந்தெந்த வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அனுப்புவது பற்றி சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்கள் கண்டறிந்து ஒதுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. சிறப்பு நீதிமன்றங்களால் வழக்குகள் உள்ள அரசியல்வாதிகள் ஆட்டம் கண்டிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டிய 1,581 மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் நிரம்பியிருக்கிறார்கள். மக்களவையின் 543 ‘மக்கள் பிரதிநிதி’களில் 184 எம்.பி-கள்மீது வழக்குகள் உள்ளன. அதாவது மொத்த எம்.பி-க்களில் 34 சதவீதம் பேர் குற்றப் பின்னணியினர். இதில் ஆளும் பி.ஜே.பி-யில்தான் அதிகபட்சமாக 97 பேர்மீது வழக்குகள் இருக்கின்றன. கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, கடத்தல், ஈவ் டீசிங், போன்ற மிகக் கடுமையான வழக்குகளில் மட்டும் 112 எம்.பி-களுக்குத் தொடர்பு இருக்கிறது. கொலை வழக்கில் 10 பேரும், கொலை முயற்சி வழக்குகளில் 17 பேரும், வகுப்புவாத விரோதம் தொடர்பான வழக்குகளில் 16 பேரும், திருட்டு, கொள்ளை வழக்குகளில் 10 பேரும் இருக்கிறார்கள். மாநிலங்களவை கணக்கைப் பார்த்தால் 233 பேரில் 44 பேர் (19%) குற்றப் பின்னணியினர்.



நாடாளுமன்றத்தின் மக்களவை (543) மற்றும் மாநிலங்களவை (233) உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 776. இதுதவிர 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கிற எம்.எல்.ஏ-க்களின் மொத்த எண்ணிக்கை 4,120. எம்.பி-க்களையும் எம்.எல்.ஏ-க்களையும் கூட்டினால் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,896. இந்த 4,896 ‘மக்கள் பிரதிநிதி’களில் 1,581 பேர் (33%) குற்றப் பின்னணியினர். குற்றப் பின்னணி கொண்ட இந்த 1,581 மக்கள் பிரதிநிதிகளில் பி.ஜே.பி.தான் டாப் 1. இந்தியா முழுவதும் பி.ஜே.பி-க்கு இருக்கிற எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 1,675. இதில் 523 பேர் குற்றப் பின்னணியினர். இந்த 523-ல் 337 பேர்மீது கடுமையான குற்ற வழக்குள் உள்ளன. இந்த 1,581 பேரில் 51 பேர்மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

மாநில சட்டமன்றங்களில் அதிக குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள் இருப்பது மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான். மொத்தமுள்ள 288 எம்.எல்.ஏ-க்களில் 160 பேர்மீது வழக்குகள் உள்ளன.

2-வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் 3-வது இடத்தில் பீகாரும் 4-வது இடத்தில் மேற்கு வங்காளமும் 5-வது இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. 7-வது இடத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் இருக்கிறது. 234 பேரில் 75 பேர் குற்றப் பின்னணியினர். மிக மோசமான குற்ற வழக்குகள் உள்ள மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ-க்களிலும் மகாராஷ்ட்ராதான் முன்னிலை. 111 பேர்மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன. உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், தெலங்கானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதிலும் தமிழ்நாடு 7-வது இடம்.


2016 சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த 232 எம்.எல்.ஏ-க்களில் 75 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். மொத்த சட்டசபையில் 34 சதவிகிதம். இந்த 75 பேர்களின் வழக்குகளை எல்லாம் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது. (அந்த 75 பேர் யார் யார் தனியாக தரப்பட்டிருக்கிறது.) இந்த 75 எம்.எல்.ஏ-க்களில் 42 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சீரியஸ் வழக்குகள் இருக்கின்றன. 75 எம்.எல்.ஏ-க்களில் 28 பேர் அ.தி.மு.க-வினர். 42 பேர் தி.மு.க-வினர். 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். சீரியஸ் கிரிமினல் வழக்கு உள்ளவர்களில் கட்சி ரீதியாகப் பார்த்தால் தி.மு.க-வில் 23 பேர். அ.தி.மு.க-வில் 16 பேர். காங்கிரஸில் 3 பேர். திருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி மீது கொலை வழக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 9 எம்.எல்.ஏ-க்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதில், 5 பேர் தி.மு.க-வினர். 2 பேர் அ.தி.மு.க-வினர். ஒருவர் காங்கிரஸ்காரர். தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபு மீது பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு உள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");