[ad_1]
திருச்சி மாநகர பகுதிகளில் கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வீடுகளில் புகுந்து திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களையும், செயின் பறிப்பு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஒரேநாளில் 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
வீடுகளில் கைவரிசை காட்டிய திருடர்கள்
திருச்சி போலீஸார், திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பைக்கில் வந்த 3-பேரை பிடித்து விசாரித்ததில், திருச்சி மேலரண்சாலை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த கோகுல்ராஜ், அடுத்து தாராநல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த அஜீத், அலங்கராஜ் என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் தேவதானம் ரயில்வே கேட் அருகில் உள்ள வீடுகளில் எல்.இ.டி டிவி மற்றும் 4-செல்போன்கள் ஆகியவைகளை அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து பொருள்கள் மீட்கப்பட்டன.
லேப்டாப் திருட்டு
இதேபோல் பெரியகடை வீதி பகுதியில் யானை மார்க் மிட்டாய் கடை முன்பாக போலீஸார் ரோந்து செய்து, அங்கு கையில் கைப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த திருச்சி பட்டவர்த் சாலையைச் சேர்ந்த சண்டி என்கிற சக்திவேல், தாராநல்லூர் நாகராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்து, அவர்கள் கையில் இருந்த கைப்பையை சோதனைச் செய்தனர். அதில் லேப்டாப் இருந்தது. இதுதொடர்பான விசாரணையில், தாராநல்லூர், வசந்த நகரில் சரவணா ஹெல்த்கேர் மெடிக்கல் குடோனில் இவர்கள் லேப்டாப் திருடியதையும், அதனை விற்க வந்ததாகவும் கூறினர்.
மேலும் தனிப்படையினர் உறையூர் வெக்காளியம்மன் கோயில், ரவி டீ ஸ்டால் அருகில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் உறையூர் பாத்திமா நகர் ஆலித் (எ) ஓட்டை ஆலித் என்பதும், அவர் மீது பல வழக்குகள் உள்ளது தெரியவந்தன. மேலும் அவர் கடந்த ஜூலை மாதம், உறையூர் செட்டிபேட்டைத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருடியது தெரியவந்தது. அவர் மறைத்து வைத்திருந்த சுமார் 6½ பவுன் எடையுள்ள தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.
இதேபோல் திருச்சி தில்லைநகர் ஜெயம் ராஜ் கிராண்டு அப்பார்ட்மென்ட், ராமச்சந்திராபுரம் கிழக்கு விஸ்தரிப்பு போன்ற பகுதிகளில் நடந்த திருட்டுகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்த சலீம் என்பவர் தென்னூர் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் ரூ.90,000 மதிப்புள்ள சுமார் 9¼ பவுன் நகைகளை மீட்கப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில், பல பகுதிகளில் குற்றவாளிகளை கைது செய்ததுடன், திருடுப் போன பொருள்களை மீட்டத் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டியுள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒரே நாளில் 7 திருடர்கள் கைது… திருச்சி போலீஸ் அதிரடி!
TAGS :
COMMENTS