[ad_1]
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைக் கடுமையாகப் புரட்டிப்போட்ட ஒகி புயலால் இன்னும் 661 மீனவர்களின் கதி அறியப்படவில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இரு மாநிலங்களிலிருந்தும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதலில் அஞ்சப்பட்டது. படிப்படியாக அவர்களில் கணிசமானவர்கள் தாங்களாகவும், குறிப்பிடத்தக்கவர்கள் கடற்படையாலும் மீட்கப்பட்டு கரைதிரும்பினர். ஆனாலும், காணாமல்போன மீனவர்கள் பற்றிய தகவல்களில் குழப்பம் நீடித்தது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் செல்வோரில் பெரும்பாலானவர்கள், வெளியூர்களில் வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் போய் அங்கிருந்து கடலுக்குப் போவதும் உடனடியாகத் தகவல் அறிய முடியாததுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
ஒருவழியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகம் பாதிக்கப்பட்ட தூத்தூர் வட்டாரப் பகுதியில் ஊர்வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த 13-ம் தேதி நிலவரப்படி, கரை திரும்பாதவர்கள் 376 பேர் என அறிவிக்கப்பட்டது. அருகிலுள்ள நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் சேர்ந்தால், இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா எழுத்துமூலம் அளித்த பதிலில், ``இதுவரை ஒகி புயலால் 661 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்; இவர்களில் 400 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; 261 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
`டிசம்பர் 20 வரை விமான, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியன 821 பேரைக் காப்பாற்றியுள்ளன. 24 பேரை வர்த்தகக் கப்பல்கள் காப்பாற்றியுள்ளன. காப்பாற்றப்பட்டவர்களில் 453 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; 362 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்; 30 பேர் லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்” என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒகி புயலால் 661 மீனவர்களைக் காணோம் - அமைச்சர் நிர்மலா சொல்லும் கணக்கு! | 661 Fishermen still missing
TAGS :
COMMENTS