[ad_1]





இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இவரிடம் பயிற்சிபெற்ற ஜூனியர் வீரர்கள் பலரும் தற்போதைய சீனியர் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். 





தி வால் ஆஃப் இண்டியன் டீம் (The wall of Indian)’ என்று புகழப்படும் டிராவிட், தனது கேரியர் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை முதன்முறையாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அரைசதம் அடிப்பது பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. இந்திய அணிக்காக 604 முறை நான் பேட்டிங் செய்துள்ளேன். அவற்றில் 410 முறை 50 ரன்களைக்கூட நான் கடக்கவில்லை. வெற்றியைவிட தோல்விகளையே நான் அதிகம் சந்தித்துள்ளேன். எனவே, தோல்வி குறித்துப் பேச எனக்கு தகுதிகள் அதிகமுள்ளது.

அதேபோல், எங்கள் தலைமுறையின் மிகப்பெரிய ஜாம்பவானாகக் கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்திய அணிக்காகக் களமிறங்கிய 781 முறைகளில் 517 முறை 50 ரன்களைக் கடக்கவில்லை. அவரும், வெற்றியைவிட தோல்வியையே அதிகம் சந்தித்திருக்கிறார். என்னுடன் விளையாடிய வீரர்கள் மற்றும் உலகின் தலைசிறந்த தடகள வீரர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது, தோல்வியை எப்படி அணுகுவது என்பதைத்தான். எப்படி சிறப்பாகத் தோல்வியடைவது என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருந்தனர்’ என்று பேசினார்.   
  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");