[ad_1]
புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
புத்தாண்டை நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரு தினத்தில் அடுத்த ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள் சலுகை அறிவிப்பது வழக்கம். விலைக் குறைவாக இருப்பதால் மக்கள் போட்டிபோட்டு வாங்குவார்கள். அந்தச் சமயங்களில் பொதுவாகக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும். பெங்களூரு மாநகராட்சி புத்தாண்டை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புத்தாண்டில் பெங்களூரு பி.பி.எம்.பி மருத்துவமனையில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சம்பத் ராஜ் அறிவித்துள்ளார். இந்தத் தொகை மாநகராட்சி ஆணையர் மற்றும் அந்தக் குழந்தையின் பெயரில் வங்கியில் வைப்புத்தொகையாக வைக்கப்படும். அந்தக் குழந்தையின் படிப்புச் செலவுகளையும் மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும். இதுசம்பந்தமாக, பெங்களூரு மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் இந்த அறிவிப்பு பெருவாரியானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`ரூ.5 லட்சம் பெறப்போகும் அதிர்ஷ்டசாலி குழந்தை யார்?' பெங்களூரு மாநகராட்சியின் செம அறிவிப்பு
TAGS :
COMMENTS