[ad_1]

Madurai: 

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 551 பேரின் நிலை என்ன என்பதுகுறித்து, வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், 'கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த நவம்பர் 29-ம் தேதி இரவிலும், மறுநாள் பகலிலும் ஒகி புயலால் பேரழிவு ஏற்பட்டது. 200 படகுகளில் ஆழ்கடல் பகுதிக்கு மீ்ன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள், இதுவரை கரை திரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில், 42 மீனவ கிராமங்களில் வாழும் 80 ஆயிரம் மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.

ஒகி புயல் தொடர்பாக மத்திய, மாநில அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை. ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கு, ஒக்கி புயல் தொடர்பான எந்தத் தகவலும் தெரியவில்லை.  அதனால், அவர்கள் புயலில் சிக்கிக்கொண்டனர்.  அவர்களை ஹெலிகாப்டரை அனுப்பி மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.

நவம்பர் 31-ம் தேதியே மத்திய, மாநில அரசுகள் கடல் பகுதியில் ஹெலிகாப்டரை அனுப்பி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள். மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியபோது, 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாதது தெரியவந்தது. மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல், அவர்களின் குடும்பத்தினர் தவித்துவருகின்றனர். இதனால், மாயமான 551 மீனவர்களையும் கண்டுபிடித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா ஆகியோர்கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");