[ad_1]
இந்திய அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Photo Credit:BCCI
விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியின் இன்னிங்ஸை குணதிலகாவும், தரங்காவும் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 15 ஆக இருந்தபோது 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குணதிலகா பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு தரங்காவுடன் ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, ரன் ரேட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இந்த ஜோடியை சஹால் பிரித்தார். சமரவிக்ரமா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உபுல் தரங்கா, 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனியின் அபார ஸ்டம்பிங்கில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தவந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 44.5 ஓவர்களில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி, கடைசி 8 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணி தரப்பில் சஹால் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருப்பதால், இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
55 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி! - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி
TAGS :
COMMENTS