[ad_1]
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலையொட்டி இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரப்பிரசாரம் செய்து வருகின்றன. அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார்கள். டி.டி.வி தினகரன் சுயேட்சையாக களம் இறங்குகிறார்.எந்த முறைகேடும் இன்றி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கணக்கில் காட்டாமல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், ஆர்.கே. நகரில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 148 புகார்கள் வந்துள்ளன. அதில் 142 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 15 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு ஒருமுறை வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து இருந்தது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆர்.கே. நகரில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல்!
TAGS :
COMMENTS