[ad_1]





சென்னை அண்ணாசாலையில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாதுரையின் சிலை பொன்விழாவை நிறைவு செய்ய இருக்கிறது. `சிலை வைக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருந்தார். அண்ணாவைக் கட்டாயப்படுத்தி, மாடலாக அமர வைத்து சிலையை வடித்தார்கள்' என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 




தமிழக அரசியல் களத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, 1967-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வித்திட்டார் அண்ணாதுரை. சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார் அண்ணா. இதையடுத்து, 1968-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்.



Wiki Image

மாநாட்டின்போது மவுன்ட் சாலையில் அண்ணாவுக்கு சிலை வைக்கும் முடிவுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் தி.மு.க செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். "இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது திறக்கப்பட்ட சிலை இது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர், அண்ணாவுக்காகச் சிலை வைக்கப்போவதை அண்ணாவிடமே கூறினார். இப்படியொரு முயற்சிக்கு அண்ணா சம்மதிக்கவில்லை. 





'சிலை வைக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், அண்ணாவை அன்பாகத் தொந்தரவு செய்து, சிலை வைப்பதற்கு சம்மதம் வாங்கினார். அண்ணாவின் ஒருசில புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலை வடிக்கத் தொடங்கினர் சிற்பிகள். 'படங்களைப் பார்த்து வரைவதைவிட, அண்ணாவே மாடலாக அமர்ந்தால் சிலை தத்ரூபமாக இருக்கும்' என நினைத்தார் எம்.ஜி.ஆர்.

இதையடுத்து, மீண்டும் அண்ணாவுக்கு அன்புத் தொல்லை கொடுத்து, மாடலாக அவரையே அமர வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. அண்ணா சிலை திறப்பு விழாவின்போது ஈ.வெ.கி.சம்பத், கருணாநிதி ஆகியோர் உடன் நிற்கின்றனர். சிலையை திறந்து வைத்தவர் ஏ.ராமசாமி முதலியார். இதுவே அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சியாகும்" என்றார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");