[ad_1]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாலாட்டின் புதூர் அருகே கார் - மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சம்பவ இடத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஒரு பெண் உள்பட 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் தீனதாயளன். இவர் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி எடுப்பதற்காக தனது மனைவி கனகவள்ளி, மகள்கள் ஆனந்த லெட்சுமி, திவ்யா ஜோதி மற்றும் தீனதாயளன், தாயார் வரதராஜ மணி, ஆனந்தலெட்சுமி கணவர் சரவணக்குமார் ஆகியோருடன் திருநெல்வேலிக்கு காரில் சென்றுள்ளார். அங்கு ஜவுளி எடுத்து விட்டு அனைவரும் சிவகாசிக்கு திரும்பியுள்ளனர். கோவில்பட்டி, நாலாட்டின்புதூர் அருகில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, கார் தீடீரென தனது கட்டுப்பாட்டினை இழந்து எதிரில் உள்ள சாலைக்குச் சென்றது.
அப்போது, கோவில்பட்டியில் இருந்து கங்கைகொண்டான் நோக்கி சென்று கொண்டு இருந்த மினிலாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீனதயாளன், கனகவள்ளி, ஆனந்தலெட்சுமி, சரவணக்குமார் வரதராஜமணி மற்றும் கார் ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் வந்த திவ்யா, மினி லாரி டிரைவர் பாலமுருகன், கிளினர் பாண்டியராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன ஆனந்தலெட்சுமி, சரவணக்குமார் இருவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதிக்கு தலைபொங்கலுக்கு ஜவுளி எடுத்துவிட்டு வரும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. டயர் வெடித்தோ அல்லது பிரேக் கட் ஆகிய காரணத்தினால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தினை மாவட்ட எஸ்.பி.மகேந்திரன் நேரில் பார்வையிட்டார்.
இவ்விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கோவில்பட்டி அருகே கார் - மினிவேன் மோதிய விபத்தில் 5 பேர் பலி | Car
TAGS :
COMMENTS