[ad_1]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தீபக், `மரணம் தொடர்பாக சந்தேகிக்கும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்' எனத் தெரிவித்தார்.
ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தநிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவரது மரணத்துக்குப் பின், அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ள, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. அதன்படி, விசாரணையைத் தொடங்கி நடத்திவரும் ஆறுமுகசாமி, இன்று தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணையை மேற்கொண்டார்.
விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர் தீபக், `'ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்குள் இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் விளக்கியுள்ளேன். அதேபோல, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் ஏற்படும் அனைவரிடமும் கட்டாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஜெ. மரணம் தொடர்பாக 4 மணி நேரம் விசாரணை! என்ன நடந்தது என தீபக் பேட்டி
TAGS :
COMMENTS