[ad_1]
Nellai: ஒகி புயலால் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்த 47 மீனவர்கள் 20 நாள்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு கரை திரும்பிக் கொண்டிருப்பதால், உறவினர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒகி புயலின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலுக்குச் சென்ற நூற்றுக்காணக்கான மீனவர்களின் கதி என்ன? என்பதே தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் புலம்பித் தவித்து வருகின்றனர். மீனவக் கிராமங்களில் தொடர்ந்து அழுகுரல்கள் கேட்டபடியே இருக்கின்றன.
குமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற 4 விசைப்படகுகள் நடுக்கடலில் தத்தளித்தபடி இருந்ததை மீட்புப் படகுகளில் சென்ற மீனவர்கள் கண்டுபிடித்து அழைத்துவருகின்றனர். அந்த விசைப்படகில் 47 மீனவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும் கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிர் தப்பி வரும் மீனவர்களை மீட்க அந்தக் கிராமத்தினர் கடற்கரையில் காத்துக் கிடக்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசிய எழுத்தாளரான குறும்பனை பெர்லின், ‘’குமரி மாவட்டத்தின் வள்ளவிளை கிராமத்தில் இருந்து 5 விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள் ஒகி புயலால் கடலுக்குள் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் கடந்த 11 நாளுக்கு முன்னர் வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாங்களாகவே தேடும் பணியில் ஈடுபட முடிவு செய்தனர். அவர்கள் 8 விசைப்படகுகள் மூலமாக கொச்சின் கடற்கரையில் இருந்து மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றார்கள்.
தங்களுடைய விசைப்படகுகளுக்குச் சொந்தச் செலவில் டீசல் போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். ஜி.பி.எஸ் உபகரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். 8 நாள்கள் தேடுதலுக்குப் பின்னர் நோவா என்ற விசைப்படகில் நடுக்கடலில் தத்தளித்த 10 மீனவர்களைக் கண்டுபிடித்து 19-ம் தேதி அவர்களை கொச்சின் துறைமுகம் வழியாக வள்ளவிளை கிராமத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து கடலுக்குள் மீனவர்கள் தேடியதில் 300 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதியில் டீசல் இல்லாமலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செயின்ட் பிரான்சிஸ், மேரி இமாகுலேட், ஓசியன் ஹண்டர், செயின்ட் ஹவுஸ் ஆகிய 4 விசைப்படகுகளை மீனவர்களே கண்டுபிடித்தனர். அதில் 47 மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மீனவர்களே முதலுதவி அளித்து பத்திரமாக படகுகளுடன் சேர்த்து அழைத்து வருகிறார்கள்.
வெறும் ஜி.பி.எஸ் உதவியுடன் மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தி தங்களுடைய சொந்தங்களை மீட்டு வரும் நிலையில், வல்லரசான நமது நாட்டு கடலோரப் படையினர் இதுவரை எத்தனை மீனவர்களை மீட்டு இருக்கிறார்கள்? விமானம், கப்பல் மூலமாக தேடுதல் நடத்தியதில் எவ்வளவு பேர் மீட்கப்பட்டார்கள்? அனைத்து அதிநவீன உபகரணங்களையும் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நமது கடற்படை மற்றும் விமானப் படை இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றன?’’ என்று கேள்வி எழுப்பினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நடுக்கடலில் தத்தளித்த 47 மீனவர்கள் 20 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: உறவினர்கள் உற்சாகம்!
TAGS :
COMMENTS